பெட்ரோல் விலை உயராது-தேர்தல் பயத்தால் ஒத்தி வைப்பு
டெல்லி:
லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயராது என்ற அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார்.
கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் வெகுவாக உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நெருக்குதல் காரணமாக பெட்ரோல், டீசல் விலைய உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவும் சந்தித்தனர். அப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து பிரதமருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் இப்போதைக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் நிலைமையை சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு அமைச்சர்களிடமும் பிரதமர் அறிவுறுத்தினார். சாமானிய மக்களின் மீது அதிக சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார் என்று தெரிகிறது.
மேலும், டீசல் மீதான கலால் வரியை மாற்றி அமைப்பது குறித்தும் பிரதமருடன் இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.
விலையை உயர்த்தாமல் நிலைமையை சமாளிப்பது தொடர்பான திட்டத்தை அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் முரளி தியோராவை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலைலை உயர்த்துவதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதற்கு லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பே காரணம் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications