கொடுத்த பணத்தை கேட்டவருக்கு அடி உதை
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி உதை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறந்தாங்கியை அடுத்துள்ள அரசர்குளத்தில் வசிப்பவர் பக்ரீ்ன்மைதீன். இவரும், இவரது மகள் புரூகானும் சிங்கப்பூருக்கு செல்வதற்காக விசா வாங்க அரசர்குளத்தை சேர்ந்த முகமது ஜாலீப்பிடம் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட முகமது அவர்கள் இருவரையும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் சென்ற விசா போலியானது என்பதால் குடியுரிமை அதிகாரிகளால் அவர்கள் உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியா திரும்பியவுடன், தனக்கு போலி விசா கொடுத்த ஏமாற்றிய முகமது ஜாலீப்பிடம் தனது பணதை திருப்பி தருமாறு பக்ரீ்ன்மைதீனும் அவரது மகள் புரூகானும் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த முகமது அவர்கள் இருவரையும் தகாத வார்தைகளால் திட்டியதோடு பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். தொடர்ந்து அவர்கள் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால், இருவரையும் முகமது ஜாலீப் அருகில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பக்ரீ்ன்மைதீன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
இது குறித்து அறந்தாங்கி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications