ஆபாச சிடிக்கள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி:
தூத்துக்குடியில் ஆபாச சிடிக்கள் விற்பனை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடியில் ஆபாச சிடிக்கள் மற்றும் திருட்டு விசிடிக்கள் விற்பனை அதிகம் இருப்பதாக நெல்லை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நாகசங்கர் தலைமையில் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் சில சிடிகடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஒரு கடையில் இருந்து 160 ஆபாச சிடிகள் மற்றும் 160 புதிய சினிமா சிடிக்கள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் ஷாஜகானை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆபாச சிடிக்கள் மற்றும் புதிய சினிமா திருட்டு சிடிக்கள் 320வை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஷாஜகான் மீது ஏற்கனவே 4 ஆபாச சிடி வழக்குகள் உள்ளது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நாகசங்கர் பரிந்துரையின்பேரில் தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டி உத்தரவின் பேரில் ஷாஜகான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்மாவட்டங்களில் திருட்டு மற்றும் ஆபாச சிடி வழக்கில் முதல் முறையாக ஷாஜகான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருட்டு விசிடிக்களை தொடர்ந்து விற்பனை செய்துவருபவர்களை இதே போன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தால் திருட்டு விசிடி விற்பனை ஓரளவு குறையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications