மறுபடியும் பாக். வருகிறாராம் நவாஸ் ஷெரீப்!
இஸ்லாமாபாத்:
முஷாரப் அரசால் 2 முறை நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் மீண்டும் பாகிஸ்தான் திரும்பவுள்ளதாக அவரது மகன் ஹாசன் நவாஸ் கூறியுள்ளார்.
1999ம் ஆண்டு ரத்தம் சிந்தாத ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் அரசைக் கைப்பற்றிய முஷாரப் பின்னர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தினார். அதன் பின்னர் சவூதியிலும், லண்டனிலும் வசித்து வந்த ஷெரீப் கடந்த செப்டம்பர் 10ம் தேதி பாகிஸ்தான் திரும்பினார்.
ஆனால் அவரை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்த பாகிஸ்தான் அரசு, பின்னர் மீண்டும் சவூதிக்கே ஷெரீப்பை நாடு கடத்தியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நாடு திரும்ப ஷெரீப் திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து அவரது மகன் ஹாசன் நவாஸ் கூறுகையில், எனது தந்தையும், சித்தப்பா சபாஷ் ஷெரீப்பும் ஒன்றாக நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளனர். தற்ேபாது எனது தந்தை மதீனாவில் உள்ளார்.
ரம்ஜானுக்குப் பிறகு அவர் ஜெட்டா செல்லவுள்ளார். அங்கு சிலநாட்கள் தங்கிய பின்னர் லண்டன் செல்வார். லண்டனில் இரண்டு அல்லது 3 வாரங்கள் தங்கி விட்டு எனது அப்பாவும், சித்தப்பாவும் நவம்பர் 15யிலிருந்து 30ம் தேதிக்குள் பாகிஸ்தான் திரும்புவார்கள் என்றார்.
ரம்ஜானுக்குப் பிறகு ஷெரீப் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என சவூதி அரசு ஷெரீப்புக்கு அனுமதி அளித்துள்ளதாம்.
ஏற்கனவே இரு முறை நாடு கடத்தப்பட்ட ஷெரீப் தற்போது 3வது முறையாக பாகிஸ்தான் திரும்பவுள்ளார். இப்போதும் நாடு கடத்தப்படுவாரா அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா என்று தெரியவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications