பெனாசிரைக் கொல்வோம் - தலிபன் மிரட்டல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் திரும்பவுள்ள முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி கொன்று விடுவோம் என்று தலிபன் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் முஷாரப் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெனாசிர் பூட்டோ தானாகவே நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த நிலையில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பெனாசிருக்கும், முஷாரப்புக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உருவானது. இதன்படி பெனாசிர் மீதான அனைத்து ஊழல் வழக்குகளையும் முஷாரப் தள்ளுபடி செய்து விட்டார்.
இந்தப் பின்னணியில், சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. இருந்தாலும் இத்தேர்தலில் முஷாரப் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வருகிற 17ம் தேதி பெனாசிர் நாடு திரும்புகிறார். இந்த சமயத்தில், அவரை தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொலை செய்யப் போவதாக தலிபன் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபன் தலைவர் பைதுல்லா மசூத் கூறுகையில், பெனாசிர் நாடு திரும்பியதும் அவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி கொலை செய்வோம்.
இதற்காக தற்கொலைப் படை தீவிரவாதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பைதுல்லா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications