குலுக்கல் ஆட்டத்துக்குத் தடை
மதுரை:
கோவில் விழாக்களின்போது நடத்தப்படும் இசைக் கச்சேரிகளில் குத்தாட்டம், குலுக்கல் ஆட்டம் போன்ற ஆபாச நடனங்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். மாறாக, பரதநாட்டியம் உள்ளிட்ட கலாச்சார நடனங்களை ஆடலாம் என அறிவித்துள்ளனர்.
மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் கோவில் விழாக்களின்போது இசைக் கச்சேரிகள் நடைபெறும். இதில் குத்தாட்டப் பாடல்களுக்கு ஆபாசமாக ஆடுவது அதிகரித்து வந்தது. மேலும் ரெக்கார்டு டான்ஸும் படு பிரபலமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிகள் நள்ளிரவையும் தாண்டி நடைபெறும். அப்போது பெண்கள் யாரும் இல்லாமல், ஆண்கள் மட்டுமே இந்த ஆட்டம் பாட்டங்களைக் கண்டு களிப்பார்கள். பெரும்பாலும் ஆபாச களஞ்சியமாக மாறி வந்த இந்த ஆபாச ஆட்டங்களைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வந்தது.
இந்த நிலையில் தற்போது இதுபோன்ற ஆபாச ஆட்டங்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் ராமராஜன் கூறுகையில்,
ரெக்கார்ட் டான்ஸ் மற்றும் ஆபாச ஆட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு இனி அனுமதி கிடையாது. கோவில்களிலும், கோவில் விழாக்களிலும் இனிமேல் இதுபோன்ற ஆட்டங்கள் அனுமதிக்கப்படாது.
மாறாக, பரதநாட்டியம், கதகளி, மெல்லிசைக் கச்சேரி உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications