ஹைதராபாத்தில் சுனாமி எச்சரிக்கை மையம் தொடக்கம்: 13 நிமிடத்தில் எச்சரிக்கும்!
ஹைதராபாத்:
இந்தியாவை சுனாமி தாக்கி 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஹைதராபாத் நகரில், தேசிய சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கை மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னிந்தியாவை சுனாமி பேரலை தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சுனாமியை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்வதற்கான மையத்தை நிறுவ மத்திய அரசு தீர்மானித்தது. இந்த மையத்தை ஹைதராபாத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி தேசிய சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கை மையம் ஹைதராபாத்தில் நிர்மாணிக்கப்பட்டு இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் பூகம்பம் ஏற்பட்டு, சுனாமி உருவான 13 நிமிடங்களில் அதுகுறித்து எச்சரிக்கை விடுக்க முடியும்.
இந்த மையத்தை இன்று நடந்த விழாவில் மத்திய அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு சுனாமி எச்சரிக்கை மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய கடல் தகவல் சேவை மையத்தில் சுனாமி எச்சரிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையம், தற்போது உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தை விட வித்தியாசமானது, அதி நவீனமயமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 125 கோடி மதிப்பில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. சுனாமி தவிர புயல், சூறாவளி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்தும் இந்த மையம் எச்சரிக்கை விடுக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications