ரூ. 7 கோடிக்கு சென்னையில் பிளாட் வாங்கிய இந்திரா நூயி!
சென்னை:
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பிலான பிளாட்டை பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி வாங்கியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் பகுதியைத் தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் பங்களாக்கள் இங்குதான் உள்ளன. சென்னை நகரின் மிகவும் காஸ்ட்லியான ஏரியா இது.
தற்ேபாது இந்த பகுதியில் இன்னொரு மிக மிக முக்கியப் பிரபலம் ஒருவர் காலெடுத்து வைத்துள்ளார். அவர்தான் இந்திரா நூயி.
பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்திரா நூயி, இப்பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்க புக் செய்துள்ளார். இந் பிளாட்டின் விலை ஜஸ்ட் ரூ. 7 கோடிதான்.
கேஜிஎஸ் ரெசிடென்சி என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் இந்த பிளாட்டைக் கட்டி வருகிறது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் உள்ள வீட்டை இந்திரா நூயி புக் செய்துள்ளார். ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு அருகில் இந்த பிளாட் உள்ளது.
இந்திரா நூயியின் சார்பில் அவரது கணவர் ராஜ் கிஸ்ஸான் நூயி, பிளாட் வாங்குவது தொடர்பான பணிகளை நேரடியாக மேற்ெகாண்டார்.
இந்திரா நூயி வாங்கியுள்ள பிளாட்டின் பரப்பளவு 4000 சதுர அடியாகும். தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த பிளாட் அடுத்த ஆண்டு உறுதியில் இந்திரா நூயி வசம் ஒப்படைக்கப்படும்.
சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி, சமீபத்தில்தான் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்றார். சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்துக் கெளரவித்தது.
சிறு வயது முதலே சென்னையில் வசித்த இந்திரா நூயி, தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரியில்தான் படித்தார். அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஹைதராபாத்தில் பணியாற்றியவர்.
அவரது தாத்தா மாவட்ட நீதிபதியாக இருந்தவர். கல்கத்தா ஐஐஎம்ல் நிதித்துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்திரா நூயி, உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications