ஷார்ஜா விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலி!
துபாய்:
ஷார்ஜாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 இந்திய சிறுமிகள் பலியானார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர்களுடைய தாயார் படுகாயமடைந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஹரூண் ரஷீத் (35). இவர் தனது மனைவி பபீனா கப்பன் (25), மற்றும் மகள்கள் ஆயிஷா தியா, தினா ருக்கியா ஆகியோருடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார். சாப்ட்வேர் என்ஜீனியராக ஹரூண் பணியாற்றி வருகிறார்.
குடும்பத்தோடு காரில் போய்க் கொண்டிருந்தார் ஹரூண். அப்போது தூக்கம் வருவது போல இருந்ததால் காரை சாலையிலிருந்து ஓரமாக நிறுத்தி விட்டு முகம் கழுவியுள்ளார்.
அந்த சமயம் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் குழந்தைகள் இருவரும் வெளியே தூக்கி எறியப்பட்டு லாரிக்குள் சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.
பபீனா கப்பன் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்ற உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
பபீனாவும், அவரது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையும் உயிருக்கப் போராடி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஹரூண் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications