மத்திய அரசுக்கு இடதுசாரிகள் இறுதி எச்சரிக்கை
டெல்லி:
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகி விட்டது என்று மத்திய அரசு திங்கள்கிழமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடது சாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானமாக அறிவிக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் இதுகுறித்துக் கூறுகையில், இந்த விவகாரத்தில் நாங்கள் காலவரையின்றி காத்திருக்க விரும்பவில்லை. திங்கள்கிழமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஒப்பந்தம் ரத்தாகி விட்டதாக மத்திய அரசு இறுதியாக, உறுதியாக அறிவிக்க வேண்டும்.
இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒப்பந்தம் ரத்தாகி விட்டது என்ற பதிலை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் பர்தன்.
சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தனக்கு இன்னும் இருப்பதாக கூறியிருந்தார். அதேசமயம் கடந்த வாரம் அவர் பேசுகையில், இது மட்டுமே அரசின் பிரச்சினை இல்லை. ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் வாழ்க்கை அத்துடன் முடிந்து போகாது என்றும் கூறியிருந்தார்.
இதனால் ஒப்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில்தான் பர்தன் இப்படி கருத்து வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications