ஆசிரியரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ஆசிரியர் ஒருவரை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீரரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செளகிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத் மிர். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் சுட்டுள்ளனர். இதில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராணுவத்தைக் கண்டித்து குப்வாரா - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தீவைத்துக் கொளுத்தினர். சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்காதவரை உடலைப் புதைக்க மாட்டோம் என கூறினர்.
தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக கூறி ராணுவம் தொடர்ந்து அப்பாவிகளை சுட்டு வீழ்த்தி வருகிறது. இதற்குக் காரணமான வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து ராணுவ அதிகாரிகள் உடனடியாக சர்ச்சையில் சிக்கிய ராணுவ வீரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications