காளிக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த பக்தர்!!
லக்னோ:
தனது விருப்பத்தை காளி தேவி நிறைவேற்றியதால், காளிக்கு தனது நாக்கை கத்தியால் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்தார் ஒரு பக்தர்.
உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் பிரதீப் ராவத் (25). தீவிர காளி பக்தரான இவர், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றினால் நாக்கை காணிக்கையாக கொடுப்பதாக காளியிடம் வேண்டிக் கொண்டார்.
இந்த நிலையில் பிரதீப் ராவத் வேண்டியது நடந்து. இதற்கு காளிதேவிதான் காரணம் என மகிழ்ச்சி அடைந்த பிரதீப் ராவத், வாக்கு அளித்தபடி நாக்கைக் காணிக்கையாகக் கொடுக்க முடிவு செய்தார்.
மஹிபல்லபூர் என்ற இடத்தில் உள்ள காளி கோவிலுக்கு சென்றார். அம்மன் முன்பு நின்று பய பக்தியுடன் வணங்கிய அவர், கோவில் பூசாரி, கருவறையிலிருந்து வெளியே சென்று பக்தர்களிடம் பிரசாதம் கொடுத்தபோது, டக்கென்று உள்ளே போய் கதவை மூடிக் கொண்டார்
இதைப் பார்த்த அனைவரும் குழம்பினர். என்ன செய்யப் போகிறார் பிரதீப் என்று புரியாமல் நின்றனர். தகவல் பறந்து கோவில் பாதுகாவலர்கள் விரைந்து வந்து கதவைத் திறக்குமாறு கூறினர். ஆனால் பிரதீப் கதவைத் திறக்கவில்லை.
பின்னர் போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது பிரதீப், கத்தியால் தனது நாக்கை அறுத்து காளியின் பாதத்தில் வைத்திருந்ததைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.
உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அறுபட்ட நாக்குடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். துண்டிக்கப்பட்ட நாக்கை மீண்டும் ஒட்ட வைக்கும் அறுவைச் சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர். அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications