மீண்டும் புலிகள் அதிரடி விமானத் தாக்குதல் 3 ஹெலிகாப்டர்கள் சேதம்-5 பேர் பலி
கொழும்பு:
இலங்கையின் அனுராதபுரம் விமான தளத்தில் விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை விமான தாக்குதல் மேற்கொண்டு குண்டு வீசித் தாக்கினர். இந்த அதிரடித் தாக்குதலில் தளத்தில் நின்று கொண்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. புலிகளின் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
![]() |
| Click here for more images |
நில வழி மற்றும் கடல் வழியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இந்த ஆண்டில் புதிதாக வான் பலத்தையும் பெற்றனர். இலகு ரக விமானங்களைக் கொண்டு புதிய விமானப்படையை உருவாக்கி இலங்கை அரசை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
வான் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படையினர் இதுவரை 3 முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வான்புலிகள் படையினர் இன்று மீண்டும் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள விமான தளத்திற்கு விடுதலைப் புலிகளின் இலகு ரக போர் விமானம் ஒன்று பறந்து வந்தது. வந்த வேகத்தில், விமான தளம் மீது 2 குண்டுகளைப் போட்டது.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு சேதமடைந்தன.
அதேசமயம், விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக வந்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அனுராதபுரம் அருகே உள்ள தொரமதலவா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானி, இணை விமானி, 2 பொறியாளர்கள் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிகிறது.
விமானத் தாக்குதல் நடந்த அதே நேரத்தில் தரை மார்க்கமாவும் விடுதலைப் புலிகள் விமான தளத்தைத் தாக்கினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தாக்குப் பிடிக்க ராணுவம் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்தப் பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த இரட்டைத் தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
விமான தளத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையின் கூறுகையில், ஒரே நேரத்தில் விமானம் மூலமும், தரை மார்க்கமாகவும், புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றார்.
தாக்குதல் நடந்த விமான தளப் பகுதியில் அதிகாலை 3.30 மணி முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக அப்பகுதியில் வசிக்கும் சிங்களர்கள் தெரிவித்தனர். காலை 5 மணி வரை இந்த சண்டை நீடித்தது.
தாக்குதலில் இலங்கைப் படைகள் தரப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட விமானம் கிளிநொச்சியிலிருந்து வந்திருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது. வவுனியாவுக்கு மிக அருகில் அனுராதபுரம் உள்ளு. கொழும்பிலிருந்து 168 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வான் புலிகளின் திடீர் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையம், கட்டுநாயகே விமானப் படைத்தளம், பலாலி விமான தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக விடுதலைப் புலிகளின் நிலைகளை இலங்கை படைகள் தொடர்ந்து தாக்கி அழித்து வருகின்றன. அப்பாவித் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இலங்கை படைகள் தொடர்ந்து தாக்கி பலரைக் கொன்று வருகின்றன. இந்த நிலையில் விமானம் மூலம் மீண்டும் புலிகள் தாக்கியிருப்பது இலங்கை படையினருக்கு பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுரம், இலங்கையின் மிக முக்கிய புத்த மத நகரமாகும். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்லும் முக்கிய நகர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications