தீயணைப்பு வீரரை கம்பியால் தாக்கிய சக வீரருக்கு வலைவீச்சு
செங்கோட்டை: டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்தபோது ஏற்பட்ட தகராறில் செங்கோட்டை தீயணைப்பு வீரருக்கு கம்பியடி விழுந்தது. இது தொடர்பாக போலீசார் சக வீரரை தேடி வருகின்றனர்.
செங்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கோட்டை முத்துகுமார். இவர் செங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரராக பணிபுரிந்து வருகிறார். இங்கு மேலப்பாளையத்தை சேர்ந்த மாரிராஜா என்பவரும் வீரராக உள்ளார்.
முத்துகுமார் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அப்போது தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் உள்ள ஓய்வறையில் மாரிராஜா டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது டிவி சத்தம் அதிகமாக இருந்ததால் முத்துகுமார், மாரிராஜாவிடம் வால்யூமைக் குறைக்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த மாரிராஜா அருகில் கிடந்த கம்பியை எடுத்து முத்துகுமாரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து முத்துகுமார் செங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கனகாபாய் விசாரித்து மாரிராஜாவை தேடி வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications