கந்து வட்டிக் கொடுமை- கலெக்டரிடம் தஞ்சமடைந்த தம்பதி
திருநெல்வேலி: கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் கணவனும், மனைவியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தஞ்சமடைந்து புகார் மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் உவரியை அடுத்துள்ள கூடுதாழை வடக்கு தெருவை சேர்ந்தவர் இன்னாசி. மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. இவர்கள் இருவரும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் கோ.பிரகஷை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் குடும்ப செலவுக்காக கூடுதாழையை சேர்ந்த பவுலின், மார்த்தாள், லிவிங்ஸ்டன், நிக்சன், கலையரசி, ரூபின்டோ ஆகியோரிடம் கடனாக பணம் வாங்கி இருந்தோம். அதற்குரிய வட்டியையும் சரிவர கட்டி வந்தோம்.
இந்தநிலையில் எனக்கு (இன்னாசி) காலில் ஆணி வந்ததால் தொழிலுக்கு போகவில்லை. இதனால் என் குடும்ப வருவாய் குறைந்தது.
அசலுக்கு மேல் வட்டி கொடுத்துள்ள நிலையில் நாங்கள் வாங்கிய கடனுக்கு மேல் ரூ.7 லட்சம் தருமாறு கேட்டு எங்கள் இருவரையும் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட 6 பேரும் மிரட்டி வருகின்றனர்.
கூடுதல் பணத்தை கேட்டு அவர்கள் கொடுக்கும் தொல்லையால் நாங்கள் எங்கள் மூன்று குழந்தைகளையும் உறவினர்கள் வீட்டில் விட்டு விட்டு நாங்கள் மட்டும் ஊரை விட்டு வந்து விட்டோம். நாங்கள் நிம்மதியாக வாழ தாங்கள் தான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், நாங்கள் கடனாக வாங்கியது ரூ.60 ஆயிரம் தான். வட்டிக்கு மேல் வட்டி போட்டு அவர்கள் இப்போது ரூ.7 லட்சம் கேட்கிறார்கள். எங்களுக்கு சொந்தமாக இருந்த வல்லத்தையும் விற்று வட்டி கட்டி உள்ளேன். இருப்பினும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டினர்.
அவர்களின் தொல்லை தாங்காததால் தான் நெல்லை வந்து தற்கொலை செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது எங்களுக்கு தெரிந்த ஒருவர் எங்களை தடுத்து கலெக்டரிடம் மனு கொடுக்க கூறியதால் மனு கொடுத்து உள்ளோம்.
தற்போது நாங்கள் ஊரில் இல்லாததால் எங்களை பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் தேடி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இது குறித்து நெல்லை டி.ஐ.ஜி கண்ணப்பனிடம் மனு கொடுக்க இருக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications