கோவில்களில் மீண்டும் கருணை இல்லங்கள்- கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறுவர்களை பராமரிக்கும் கருணை இல்லங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் கருணாநிதி பேசியதாவது,
துரைமுருகன் தான், பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பதை பெருமிதமாகக் குறிப்பிட்டு, இந்தத் துறையில் தான் நம்முடைய முதல்வரும் அமைச்சராக இருந்தார் என்றார். நான் அமைச்சராக வருவதற்கு முன்பே பொதுப்பணியில் ஈடுபட்டதால்தான், என்னை பொதுப்பணித்துறை அமைச்சராக ஆக்கினார் அண்ணா.
அமைச்சர்களை நியமிக்கும்போது என்னை காட்டி, நீ பொதுப்பணி என்றார். அதில் இரண்டு பொருள் உண்டு என எனக்குத் தெரியும். எனவே எனக்கு பொதுப்பணி என்பது புதுப்பணி அல்ல, பழைய பணி தான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்புகள் தாராளமாக வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தோம். அதற்கேற்ப லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை நேரடியாக வழங்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு மாதந்தோறும் ஓர் உதவித் தொகையை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
திமுக ஆட்சியில் மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறுவர்களுக்கான ஓர் அமைப்பை, ஆலயத்தின் பாதுகாப்பில் அவர்கள் உதவியுடன் படிக்க, உண்ண, உறங்க, விளையாட ஓர் இடம் வேண்டும் என இல்லங்களை அமைத்தோம்.
அதற்கு கருணை இல்லம் என கிருபானந்தவாரியார் பெயர் வைத்தார். பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் கருணை என்ற பெயரே இருக்கக்கூடாது என அந்தப் பெயரை எடுத்துவிட்டனர். இப்போது அந்த இல்லங்கள் இல்லை.
மீண்டும் அந்த கருணை இல்லங்கள் திறக்கப்படும், தொடங்கப்படும்.
பொதுப்பணித்துறை வரலாற்றில் 1972ம் ஆண்டிலிருந்து இதுவரை 2,873 உதவிப் பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,953 பேர் திமுக ஆட்சிக் காலங்களில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications