தேவர் ஜெயந்தி-அரசு விழாவாக கொண்டாட தடை கோரி வழக்கு
சென்னை: முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் சிம்சன் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 100வது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்த விழா கொண்டாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இதை தமிழக அரசு விழாவாக கொண்டாடுவதைத்தான் எதிர்க்கிறோம்.
இந்த விழாவையொட்டி கமுதியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த செயல் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அரசு மறைமுகமாக ஆதரவு அளிப்பதையே காட்டுகிறது.
ராஜாஜி, பாரதி, பாரதிதாசன், பெரியார் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களை மத்திய-மாநில அரசுகள் கொண்டாடின. ஆனால், அந்த விழாக்களின்போது இதுபோன்ற நீண்ட விடுமுறை விடவில்லை.
காரணம் அந்தத் தலைவர்களுக்கு பின்பலமாக எந்த சமுதாயமும் இல்லை. ஆனால், முத்துராமலிங்க தேவர் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் தலைவராக விளங்கினார்.
எனவே தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடுவதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தேவர் பிறந்த தினமான 30ம் தேதி தவிர மற்ற நாட்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் எந்த சமுதாய தலைவருக்கும் பிறந்த நாள் விழாக்களை கொண்டாட விடுமுறை விடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிம்சன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications