ஏட்டு மகளை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்!-ஏட்டு தற்கொலை!!
கரூர்: கரூரில் ஏட்டு மகளை சப் இன்ஸ்பெக்டர் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் குணசேகரன். இதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கனகராஜ்.
கனகராஜ் தோகமலை அருகே பண்ணைபட்டியில் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, மகள் வனிதா. ஒரு மகனும் உள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கனகராஜ் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
இந்நிலையில் வனிதா மீது காதல் கொண்டார் குணசேகரன். இதனால் அடிக்கடி வனிதாவை பார்க்க ஏட்டு வீட்டிற்கு செல்வதுமாக இருந்துள்ளார்.
இதைப் புரிந்து கொண்ட ஏட்டு கனகராஜ் தன் வீட்டிற்கு வரவோ, போனில் பேசவோ வேண்டாம் என குணசேகரனிடம் கூறியுள்ளார்.
மேலும் தனது மகள் வனிதாவை பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதியில் தங்க வைத்தார்.
இந் நிலையில் வனிதா திடீரென காணமல் போனார். தந்தை கனகராஜ் பல இடங்களில் விசாரித்தும், தேடியும் கிடைக்கவில்லை.
வனிதாவை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், அவரது டிரைவர் தமிழ்செல்வன், காவலர் சக்திவேல் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கடத்தியதாக தெரியவந்தவுடன் மனம் உடைந்தார் கனகராஜ்.
தனது உயர் அதிகாரியே தன் மகளைக் கடத்தியதை ஜீரணிக்க முடியாமல், இதை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் தைரியம் இல்லாமல் கனகராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தனது மகளை கடத்தி, கணவரின் தற்கொலைக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், டிரைவர் தமிழ்செல்வன், காவலர் சக்திவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏட்டு மனைவி விஜயலட்சுமி தோகமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந் நிலையில் வனிதாவும் குணசேகரனும் ரகசிய திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் தகவல் பரவியுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்த திருச்சி டிஐஜி அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட ஏட்டின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
வனிதா, குணசேகரன் திரும்பி வந்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications