ரூ.30 லட்சம் எரிசாராயம் பறிமுதல்-ஒருவர் கைது, கார்களும் பிடிபட்டன
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் பழவூர் அருகே இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 321 எரி சாராய கேன்கள் பிடிபட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை வழியாக கேரளாவுக்கு தொடர்ந்து எரிசாராயம் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு எரிசாராய கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே குறிச்சான்பட்டி கோழிப்பண்ணையிலும், பணகுடியிலும் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பிடிப்பட்டது.
போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் எரிசாராயம் கடத்துபவர்கள் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊருக்கு ஓதுக்குபுறமான தோட்டங்கள், மற்றும் பாழடைந்த வீடுகளில் எரிசாராயத்தை மொத்தமாக பதுக்கி வைத்திருக்கின்றனர்.
லாரிகளில் கடத்தினால் போலீசாரிடம் சிக்கி கொள்கிறது என்பதால் அதனை சிறிய அளவில் கேன்களாக பிரித்து கார்கள் மூலம் கேரளாவிவிற்கு கடத்தி செல்கின்றனர்.
நெல்லை மாவட்டம் தெற்கு கருங்குளம் சங்கனாபுரம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்.பி ஸ்ரீதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஏ.டி.எஸ்.பி மாணிக்க ராவ் தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தோட்டம் அமைந்துள்ள காட்டு பகுதிக்குச் சென்று பதுங்கியிருந்தனர்.
அப்போது 2 சான்ட்ரோ கார்கள் தோட்டத்தினுள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள மோட்டார் ரூம் அருகே அதனை நிறுத்தி எரிசாராய கேன்களை அதன் டிரைவர்கள் காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த போலீசார் 2 கார்களையும் சுற்றி வளைத்தனர்.
ஒருவர் ஓடிவிட்டார். மற்றொரு கார் டிரைவரான செல்வம் என்பவர் மட்டும் பிடிபட்டார்.
பின்னர் அங்கு நடத்திய அதிரடி சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 321 எரிசாராய கேன்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சான்ட்ரோ கார்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.30 ஆகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications