சேது திட்டத்துக்கு பார்வர்ட் பிளாக் ஆதரவு
சென்னை: தேசிய அளவில், காங்கிரஸ் - பாஜகவுக்கு மாற்றாக, இடதுசாரிகள் தலைமையில் புதிய தேசதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் கூறியுள்ளார்.
சென்னை வந்த பிஸ்வாஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் தமிழக பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்கும் உடன் இருந்தார்.
பிஸ்வாஸ் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நிறைவேற்ற முயன்றால், கண்டிப்பாக இடைத் தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும்.
நாட்டில் நிலவும் அரசியல் நிலவரத்தைப் பார்க்கும்போது, தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக, இடதுசாரிகளைத் தலைமையாகக் கொண்டு ஒரு புதிய அணி உருவாகும் வாய்ப்புகள் சாதகமாக உள்ளன. இரு கட்சிகளுக்கும் மாறான கூட்டணி கண்டிப்பாக உருவாகும்.
சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் நல்லது. இதை இறைவனின் பெயரால் தடுத்து நிறுத்த முயல்வது தவறானது. இந்தத் திட்டம் நிறைவேற பார்வர்ட் பிளாக் கட்சி முழுமையாக பாடுபடும் என்றார் பிஸ்வாஸ்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications