ஆணுக்கு பாலியல் தொல்லை தந்த ரயில்வே போலீசார்
சென்னை: ஆண் இசை ஆசிரியருக்கு பாலியல் தொல்லை தந்துள்ளனர் மூன்று ரயில்வே போலீசார்.
இந்த கேவலமான சம்பவம் சென்னை ஆவடியில் நடந்தது.
ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ரமணன் (வயது 45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இசை ஆசிரியரான இவர் திருவல்லிக்கேணியில் இசைக் கருவிகள் விற்கும் கடையில் வேலை பார்க்கிறார். அத்தோடு மாணவர்களுக்கு தனியாக இசை பயிற்சியும் அளித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் இரவு 10 மணியளவில் வியாசர்பாடியில் இருந்து மின்சார ரயிலில் ஆவடிக்கு சென்றார். ரயிலில் கூட்டமே இல்லை. இதனால் ரமணன் இருக்கையில் தூங்க ஆரம்பித்தார்.
நன்றாக தூங்கிவிட்டதால் ரயில் ஆவடியை அடைந்தது கூட தெரியவில்லை. திடீரென விழித்து பார்த்தபோது ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பிக் கொண்டிருந்தது.
இதையடுத்து ஓடும் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் குதித்தார்.
கையில் ஹார்மோனிய பெட்டியுடன் குதித்த ரமணனை அங்கு நின்றிருந்த 3 ரயில்வே போலீசார் வந்து பிடித்தனர். ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதற்காக விசாரிக்க வேண்டும் என்று கூறி ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், விசாரணை என்ற பெயரில் ரமணனிடம் அந்த காக்கிகள் மிக ஆபாசமாக நடந்து கொண்டனர். அவரது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி பாலியல்ரீதியல் தொல்லை தந்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.3,000த்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு இதை வெளியில் சொன்னால் விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டி அனுப்பி விட்டனர்.
இது குறித்து ரமணன் தனது உறவினர்களிடம் தெரிவிக்கவே, அதை ரயில்வே ஐ.ஜி. சஞ்சய் அரோராவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார் ஐஜி.
இதையடுத்து ஆவடியில் பணிபுரியும் ரயில்வே போலீசாரை வரிசையாக நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட மூன்று கேவல காக்கிகளையும் ரமணன் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து இந்த மூன்று பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் ஐஜி. மூவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இவர்களை டிஸ்மிஸ் செய்வது தான் ரயில்வேவுக்கு நல்லது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இதுபோன்ற காக்கிகளிடம் இருந்து பாதுகாப்பில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications