நக்சல் தாக்குதலில் முன்னாள் முதல்வர் மராண்டி மகன் படுகொலை
கிரித் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் நடந்த மாவோயிஸ்ட் நக்சலைட் தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஜார்க்கண்ட் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரித் மாவட்டம் சில்காரி கிராமத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில் இரவில் நடந்த கலை நிகழ்ச்சியை பெரும் திரளான மக்கள் கூடிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அனுப் மராண்டியும் அவர்களில் ஒருவர்.
அப்போது அங்கு வந்த நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கினர்.
இதில் அனுப் மராண்டி உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இந்த சம்பவத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகளைப் பிடிக்க கிரித் மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications