சுனாமிக் குடியிருப்பில் நாய் கடித்து 3 பெண்கள் பலி
கடலூர்: கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தில், வெறிநாய் கடித்து 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேவனாம்பட்டனம் பகுதியில் உள்ள சுனாமி பாதிக்கப்பட்டோருக்கான குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கண்ணகி (58), குமுதம் (44), சாந்தி (40).
இவர்களை 15 நாட்களுக்கு முன்பு ஒரு வெறி நாய் கடித்தது. இதையடுத்து மூன்று பேரும் ரேபிஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் 3 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலைமை மோசமாகி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் சரியான முறையில் டாக்டர்கள் சிகிச்சை தராமல் அலட்சியமாக நடந்து கொண்டதால்தான் 3 பேரின் நிலைமையும் மோசமாகி அவர்கள் உயிரிழக்கக் காரணம் என கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
3 பெண்களையும் கடித்த நாய் எங்கு போனது என்று தெரியவில்லை. கிராமத்தினர் அந்த நாயை பல இடங்களிலும் தேடியும் கூட அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சுனாமிக் குடியிருப்புப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications