குவைத்: கத்திக் குத்தில் இந்தியப் பெண் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: குவைத்தில் அடையாளம் தெரியாத சிலர் கத்தியால் குத்தியதில் இந்தியப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் தலீம் எனத் தெரிய வந்துள்ளது. குவைத்தில் உள்ள ஜிலீப் அல் ஷுயோக் என்ற இடத்தில் உள்ள பலசரக்குக் கடையில் அவர் சம்பவம் நடந்தபோது இருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் தலீமை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த தலீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் இருவரும் அரேபியர்கள் அணிவது போன்ற உடையுடன் வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications