அரசு கவிழ்வதும், நீடிப்பதும் காங் கையில் தான் உள்ளது-மார்க்சிஸ்ட்
சென்னை: மத்திய அரசு நீடிப்பதும், கவிழ்வதும் காங்கிரசின் கையில்தான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், அக் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான கே.வரதராஜன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
அரசியல், பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவதிலும் மார்க்சிஸ்ட் முன்னணியில் நிற்கிறது. குறிப்பாக தலித் விடுதலைக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து அகில இந்திய அளவில் போராட்டக் குழு அமைத்து செயல்பட்டு வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக மாவட்டவாரியாக கருத்தரங்கு மற்றும் போராட்டங்கள் நடத்த ஆலோசனை செய்து வருகிறோம். வரும் நவம்பர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் தலித் கொடுமைகளுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் இடதுசாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட எந்த ஒப்பந்தம் என்றாலும் எந்த நாடுடனும் விசேஷ உறவு தேவையில்லை என்றே மார்க்கிஸ்ட் கருதுகிறது.
சீனா, ரஷ்யா நாடுகளுக்கும் இது பொருத்தும். அணுசக்தி உடன்பாடு மட்டுமல்லாது எந்த வெளிநாட்டு ஒப்பந்தமானாலும் நாடாளுமன்றத்தில் விவாதித்து தான் முடிவு செய்ய வேண்டும். இதற்காக அரசியல் சட்ட திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
அணுசக்தி உடன்பாடு குறித்து அடுத்த கட்டத்தை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசுதான். இந்த அரசு நீடிப்பதும், கவிழ்வதும் காங்கிரஸ் கையில்தான் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லாததால் தான் அணுசக்தி விவகாரத்தில் பின்வாங்கி விட்டதாக சிலர் கூறுகின்றனர்.
அந்த கருத்து உண்மையல்ல. நாங்கள் எப்போதும் கொள்கை அடிப்படையில் தான் முடிவெடுப்போம். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். எதற்காகவும், யாருக்காகவும் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம்.
பதவிக்காகவோ, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவோ அமையும் மூன்றாவது அணி நிலைக்காது. கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் அந்த அணி நிலையாக நிற்க முடியும். தற்போது மூன்றாவது அணி உருவாகக் கூடிய அரசியல் சூழ்நிலை இல்லை. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.
விவசாயிகள் நலனுக்காக எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் ஒப்பந்த அடிப்படையிலான முறைகளை கைவிடவேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்துதலின் பேரில் இந்த ஒப்பந்த விவசாய முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார் வரதராஜன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications