முசிறி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வருமான வரி சோதனை!
திருச்சி: முசிறியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறியில் வருவாய் கோட்டாட்சியராக அருணாச்சலம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பு திருவள்ளூரில் வேலை பார்த்து வந்த இவர் முசிறிக்கு மாற்றலாகி வந்து 9 மாதங்கள் தான் ஆகிறது.
அருணாச்சலம் ஏகத்துக்கும் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து முசிறி, திருத்தணியில் உள்ள அருணாச்சலத்தின் வீட்டிலும், சித்தூரில் உள்ள அவருடைய பங்களாவிலும் ஒரே நேரத்தில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
அவர் பணிபுரியும் ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முசிறியில் உள்ள அருணாசலத்தின் வீட்டில் இருந்து ரூ. 1.25 லட்சம் ரொக்கம் மற்றும் பல சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக தொடர்ந்து அருணாச்சலத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாத வருமானம் ரூ. 13,000 கொண்ட அருணாச்சலத்திடம் ரூ. 60 லட்சத்துக்கும் மேல் சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications