ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகிறார் ஆர்.என்.சவானி
சென்னை: கூடுதல் டிஜிபி பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் ஆர்.என்.சவானி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஊழல் தடுப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டிஜிபியாக இருந்தவர் ஆர்.என்.சவானி. மிகவும் நேர்மையான அதிகாரியான சவானி, தமிழக பிரிவு ஐபிஎஸ். அதிகாரி ஆவார்.
திருவண்ணாமலையில் கூடுதல் எஸ்.பியாக 1980ம் ஆண்டு தனது காவல் பணியைத் தொடங்கியவர். அதன் பின்னர் பல்வேறு ஊர்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள சவானி, கடைசியாக தலைமையக கூடுதல் டிஜிபியாக இருந்து வந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு தலைமை அதிகாரியாகவும் சவானி பணியாற்றியுள்ளார்.
இடையில் சிபிஐ இணை இயக்குநர் பதவியை வகித்தார். அந்த சமயத்தில்தான் இந்திய கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்க வைத்த கிரிக்கெட் சூதாட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளிக் கொணர்ந்தது சிபிஐ. அசாருதின், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா உள்ளிட்ட இந்திய ஸ்டார் வீரர்கள் பலர் ஆதாரங்களுடன் சிக்கினர்.
சவானி குழுவினரின் அதிரடி விசாரணையால்தான் அசாருதீன் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட முடியாமல் தடை விதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அதன் பின்னர் தென் மண்டல சிபிஐ தலைமைப் பொறுப்பையும் சவானி செயல்பட்டார்.
இதையடுத்து சவானியை, தங்களது ஊழல் தடுப்புப் பிரிவு தலைமைப் பொறுப்பை ஏற்க வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இருப்பினும் சவானி தமிழக காவல் பணியிலேயே நீடிக்க விரும்பியதால் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை.
இந்த நிலையில் அவரை முக்கியப் பொறுப்பு இல்லாத பதவியில் அரசு வைத்திருந்ததால் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார் சவானி. இதையடுத்து விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால் அது ஏற்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
சமீபத்தில்தான் சவானியின் விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் சவானி தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறார்.
பதவியிலிருந்து ஓய்வு பெறும் சவானி, அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் சவானி பணியாற்றுவார். உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் சூதாட்டங்களைக் கண்டுபிடிப்பது, வீரர்கள் மீதான சூதாட்ட புகார் உள்ளிட்டவற்றைக் கவனிக்கும் பொறுப்பு சவானிக்கு வழங்கப்படவுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications