ஜப்பான்-கலிபோர்னியாவில் நிலநடுக்கம்
டோக்கியோ&ஆக்லாண்ட்: கலிபோர்னியா மாநிலத்தின் சான்ஜோஸ் நகருக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்ஜோஸ் நகருக்கு 15 கிலோமீட்டர் வட கிழக்கில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. இதன் அளவு 5.6 ரிக்டராக இருந்தது.
இந்த பூகம்பத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் சான்ஜோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கலிபோர்னியா மாநிலம் காட்டுத் தீயால் பெரும் பொருட் சேதத்தை சந்தித்து திணறி வருகிறது. இந்த நிலையில் பூகம்பம் வேறு தாக்கியதால் அம்மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்:
அதே போல ஜப்பானிலும் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக ஆடியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
ஜப்பானில் உள்ள மரியானா தீவுப் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பயங்கரமாக ஆடின. வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. தீவுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் ஜப்பான் நாட்டு அரசு விடுக்கவில்லை.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து உடனே தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications