கமுதியில் போலீசாருக்கு அடி-உதை, கும்பல் தப்பியோட்டம்!
கமுதி: கமுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போலீசாருக்கு அடி-உதை விழுந்தது. போலீசரை தாக்கிவிட்டு தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
கமுதி கூடுதல் போலீஸ் எஸ்பி நரேந்திர நாயர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வேகமாக ஒரு ஜீப் வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் ஜீப் உடனே நிற்காமல், சிறிது தூரம் தள்ளி நின்றது. இதனால் போலீசாருக்கும் ஜீப்பில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அது மோதலாக மாறியது.
இந் நிலையில் ஜீப்பில் இருந்தவர்கள் எஸ்பி நரேந்திர நாயர் மற்றும் போலீசாரை தாக்கினர். இதில் போலீசார் சத்தியயேந்திரன், ராஜாராம், நெல்லையை சேர்ந்த சிறப்பு காவல் படையை சேர்ந்த வில்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
போலீசாரை தாக்கிய அக்கும்பல் தப்பி ஒடிவிட்டது. அப்போது அவர்கள் வந்த ஜீப்பையும் விட்டு விட்டு ஒடிவிட்டனர். போலீசார் அந்த ஜீப்பை கைப்பற்றினர்.
காயமடைந்த போலீசார் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடத்தியவர்கள் கமுதியை சேர்ந்த ராமபாண்டி, நல்லமருது, தர்லிங்கம் உள்ளிட்ட 13 என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications