நைஜீரிய தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் இன்று வருகை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நெல்லை வாலிபர்கள் விமானம் முலம் இன்று நாடு திரும்புகின்றனர்.நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள வடக்கான்குளத்தை சேர்ந்தவர்கள் அஜீத், வினோத், மோகன்தாஸ். இவர்கள் மூவரும் நைஜீரியாவில் உள்ள இத்தாலிய நாட்டு ஆயில் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 26ம் தேதி நடுக்கடலில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு வந்த தீவிரவாத கும்பல் அஜீத், வினோத், மோகன்தாஸ் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த டாரி போலாந்து நாட்டை சேர்ந்த மைக்கிள் கானோ பாக்கி, ஜான் ஜோசப் ஆகிய 6 பேரையும் கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட ஊழியர்களை மீட்பது குறித்து தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அங்குள்ள ஒரு அமைப்பினர் (இடைத்தரகர்கள்) களம் இறங்கினர். அவர்கள் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி கடத்தப்பட்ட ஊழியர்களை மீட்டு வந்தனர்.
இந்திய நேரப்படி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தீவிரவாதிகள் போர்ட்ஹார்கோரட் என்ற இடத்தில் கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்தனர். தாங்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்கள் இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு இரவு 8-30 மணிக்கு வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊரான வடக்கான்குளத்திற்கு இரவு 11-30 மணிக்கு வருகின்றனர்.
தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட இந்த மூவரின் உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்பதில் சந்தோஷமாகவும் காணப்படுகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications