தூத்துக்குடி-விழுப்புரம் ரயில்வே மின் பாதைக்கு திட்ட கமிஷன் முட்டைக்கட்டை
Subscribe to Oneindia Tamil
மதுரை: தூத்துக்குடி-விழுப்புரம் ரயில்வே இரட்டைப் பாதையை மின்மயமாக்கும் திட்டதிற்கு திட்டக் கமிஷன் முட்டைக் கட்டை போட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட பின்பு ரயில்வே இணையமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை எல்லிஸ் நகர் மேம் பால பணி ஒன்னறை மாதத்தில் முடிவடையும். மதுரை-திண்டுக்கல் இரட்டை பாதை பணி நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். மதுரை ரயில்வே டிவிஷனில் நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளுக்கு ரூ. 8 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-மைசூர் இடையே புதிய ரயில் விரைவில் இயக்கப்படும்.
தூத்துக்குடி-விழுப்புரம் மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்க 772 கி.மீ. தூரத்திற்கு ரூ. 822 கோடி செலவு ஆகும். இதற்கு திட்ட கமிஷன் அனுமதி மறுத்து விட்டது.
இதற்கான மொத்த செலவில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டால் இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என கூறியுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு ரயில்வேதுறை கடிதம் அனுப்பியுள்ளது என்றார் வேலு.












Click it and Unblock the Notifications