உரிமை மீறல்: ஜெ. மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சமீபத்தில் ஜெயலலிதா அளித்த ஒரு பேட்டியில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைக் கொல்ல சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சட்டசபை மழைக் காலக் கூட்டத் தொடரின்போது ஜெயலலிதா மீது அமைச்சர் ஸ்டாலின் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.
இந்தப் பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், உரிமைக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தார்.
துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தலைமையிலான உரிமைக் குழு கூடி இது தொடர்பாக விவாதித்தது. விவாதத்தின் இறுதியில், ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உரிமைக் குழு தீர்மானித்தது.
அதன்படி ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக நேரிலோ அல்லது உரிய முறையிலோ விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிமை மீறல் பிரச்சனை குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications