யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடும் தேமுதிக - கே.என்.நேரு
சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் வாங்கிக் கொடுத்ததாக தேமுதிக சொல்லிக் கொள்வது, யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடுவது போல் உள்ளது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் வாங்கி கொடுத்ததாக தேமுதிக தலைவருக்கு நன்றி தெரிவித்து கடந்த 3ம் தேதி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டது, செயல்பட்டு வருவது திமுக ஆட்சியும், முதல்வர் கருணாநிதியும் தான்.
கடந்த 1997-98ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மற்ற தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் முதன்முதலாக வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில், 20 சதவீத போனஸ் என்பது 8.33 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அதை எதிர்த்து திமுக கரல் கொடுத்தது. தற்போது விளம்பரப்படுத்திக் கொள்ளும் யாரும் அப்போது குரல் கொடுக்கவில்லை.
கடந்த வருடம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மீண்டும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் கிடைக்க முழு காரணமாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி தான்.
யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடி விளம்பரம் செய்து கொண்டுள்ளவர்கள் அல்ல. எனவே கையில் காசு இருக்கிறது என்பதற்காக தவறான தகவல் கொடுத்து போலியாக விளம்பரம் தேடிக் கொள்ள முனைவது நல்லதல்ல என்று அமைச்சர் கே.என்.நேரு தேமுதிகவை தாக்கியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications