கரூரில் காதல் காசுகளால் பரபரப்பு
கரூர்: கரூரில் புழக்கத்தில் உலவும் காதல் காசுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் கடந்த சில நாட்களாக புதுவித நாணயம் உலா வந்து கொண்டுள்ளது. ஐந்து ரூபாய் நாணய வடிவில் இருக்கும் அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இதயத்தின் நடுவில் அம்பு பாய்ந்தது போலவும், லவ் என்ற வாசகமும் உள்ளது.
மறு பக்கத்தில் அதே போல் இதயம், அம்பு மற்றும் பெஸ்ட் பிரண்ட்ஸ் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில்தான் இது அதிகம் புழக்கத்தில் உள்ளது. காதலை தெரிவிக்க இந்த நாணயங்களை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
காதல் நாணயத்தை சுண்டிப் போட்டு லவ் என்று வந்தால் காதலிப்பது என்றும், பெஸ்ட் பிர
ண்ட்ஸ் என்று வந்தால் நண்பர்களாக தொடர்வது என்றும் தீர்மானிக்கிறார்களாம்.
காதலர்களைத் தீர்மானிக்கும் இந்த நாணயங்கள் தடம் மாறி பொதுமக்களிடமும் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக பஸ் கண்டக்டர்களுக்குத்தான் சிக்கல் அதிகமாம்.
பஸ் டிக்கெட் எடுக்க காசு கொடுப்பவர்கள், நைஸாக இந்த காதல் நாணயத்தை ஐந்து ரூபாய் என்று தள்ளி விட்டு விடுகிறார்களாம். அதேபோல டீக் கடைகளிலும் கூட இந்த நாணயங்கள் தள்ளி விடப்படுகிறதாம்.
இதனால் தங்களுக்கு பண இழப்பு ஏற்படுவதாக இரு தரப்பும் புலம்ப ஆரம்பித்துள்ளது.
காதலர்களே, காதலில் நாணயம் வேண்டும், இந்த 'நாணயத்தால்' அந்த 'நாணயம்' கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications