முஷாரப்புக்கு மண்டேலா கண்டனம்
ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதற்கு நோபல் பரிசு பெற்ற உலகத் தலைவர்களான நெல்சன் மண்டேலா, ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எல்டர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள குழுவின் சார்பாக மண்டேலா, கார்ட்டர், தென்னாப்பிரிக்காவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முஷாரப்பின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. நீதிபதிகள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மிதவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாகிஸ்தானில் சுதந்திரம் உருவாக விரும்பும், ஜனநாயகம் மலர விரும்பும் அனைவருக்கும், சர்வாதிகார செயல்களுக்கு எதிராக பாடுபடுவோருக்கும், பாகிஸ்தானில் மீண்டும் அரசியல் சட்டம் அமலுக்கு வரவும், ஜனநாயகத்தைக் கொண்டு வர பாடுபடுவோருக்கும் நாங்கள் முழு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
12க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றோர் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் இணைந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் எல்டர்ஸ் அமைப்பைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications