துபாயில் பாலம் இடிந்து 5 தமிழக தொழிலாளர்கள் பலி!
துபாய்: துபாயில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் 5 பேர் தமிழர்கள் ஆவர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தக நகரும், சுற்றுலா நகருமான துபாயில், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மிகப் பெரிய கட்டடங்கள் உள்ள இடம் ஒன்றில், மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், பாலத்தின் மீது 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு ராட்சத கிரேன் பாலம் மீது விழந்தது.
இதனால் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழுந்ததில். இதனால் இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீஸாரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி விட்டனர். இவர்களில் 5 பேர் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று காவல்துறைத் தலைவர் ஜமால் அல் மாரி கூறினார். 9 தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications