கருணாநிதியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு-மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உதவுவதாக உறுதி
சென்னை: சென்னையில் ரூ. 9,757 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என முதல்வர் கருணாநிதியிடம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.
இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரை சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம்,
மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு உதவியது போல தமிழகத்துக்கும் மத்திய அரசு உதவும். பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்கும் என்னென்ன உதவிகள் தரப்பட்டதோ அவை அனைத்தும் சென்னைக்கும் வழங்கப்படும்.
தமிழகத்தின் சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், நீர் நிலைகளை உலக வங்கி உதவியோடு பராமரிப்பது குறித்தும் முதல்வரோடு பேசினேன். எனது தொகுதியான சிவகங்கையில் சுற்றுப் பயணம் செய்தபோது சாலைகளின் மோசமான நிலை குறித்து மக்கள் என்னிடம் தெரிவித்த தகவல்களை முதல்வரிடம் தெரிவித்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications