தமிழகத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை - ஏடிஜிபி விஜயக்குமார்

Subscribe to Oneindia Tamil

Vijayakumar with Karunanidhiசேலம்: தமிழகத்தில் நக்சலைட்டுகள் அட்டகாசம் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டதாக சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

சேலம் வந்த விஜயக்குமார் அங்கு மாவட்ட சட்டம், ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் விஜயக்குமார் பேசுகையில், நக்சலைட்டுகளை ஒடுக்குவதில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

நக்சலைட்டுகள் நடமாட்டம் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டது. எங்குமே நக்சலைட்டுகள் இல்லை என்று கூற முடியும்.

நக்சலைட்டுகள் நடமாட்டம் இருந்த பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினரும், கியூ பிரிவு காவல்துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு முதல் தென்கோடி நாகர்கோவிலில் உள்ள கீரிப்பாறை வரையிலும் உள்ள வனப் பகுதிகளில் இரு படைகளும் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். தேவைப்பட்டால் இரு படைகளும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேட்டூர் அணையின் பாதுகாப்புக்காக டிஎஸ்பி தலைமையிலான ஒரு படை 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றார் விஜயக்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+