வைகோ, பழ. நெடுமாறன் புழல் சிறையில் அடைப்பு
சென்னை: சுப.தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்தை நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆகியோர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் சமீபத்தில் இலங்கை விமானப்படையினரால் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை பல்வேறு தமிழக கட்சிகள் கண்டித்திருந்தன. முதல்வர் கருணாநிதியும் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானித்தன. இந்த ஊர்வலத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
ஆனால் இந்தப் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. இந்த நிலையில் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. ஆனால் தடையை மீறி பேரணியை நடத்துவோம் என பழ.நெடுமாறனும், வைகோவும் அறிவித்தனர்.
அதன்படி நேற்று மாலை சென்னை மன்ரோ சிலை அருகே வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் கூடிய நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்ச்செல்வனின் படங்களைக் கையில் ஏந்தியபடி வந்தனர்.
ஆனால் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 360 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14 பேர் பெண்கள் ஆவர்.
பின்னர் எழும்பூர் 6வது குற்றவியல் பெருநகர நீதிபதி மைதானத்திற்கு வந்தார். அங்கு அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் பெரியார் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஆனைமுத்து என்பவரை மட்டும் அவருடைய வயது காரணமாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வைகோ உள்ளிட்டோர் மீது மீது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றது, தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது ஆகிய குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் உட்பட அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications