ராமர் பால வழக்கு: டிச.11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராகவும், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று தடை கோரியும், அதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு பரிலீசிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ராமர் இருந்தாரா, ராமர்தான் பாலத்தைக் கட்டினாரா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. இவை எல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று தெரிவித்திருந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தப் பதில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு புதிய பதில் மனுவைத்தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் விசாரணையை டிசம்பர் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள் அன்றைக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications