துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட

Subscribe to Oneindia Tamil


ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூரில் கடந்த சில தினங்களுக்கு முன முன்னாள் எம்எல்ஏ தண்டபாணிக்கும் , அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது செந்தில்குமார் துப்பாக்கியால் தண்டபாணியை சுட்டுள்ளார். அந்த குண்டு தண்டபாணியுடன் வந்த சண்முகம் என்பவர் மீது பட்டதில் அவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் செந்தில் குமாரை சென்னிமலை போலீசார் கைது செய்தனர். அவர் அவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை போலீசார் மறைத்துவிட்டு தாக்குதல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இந் நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி ஈரோடு எஸ்பி சோனல் மிஸ்ரா சென்னிமலை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது துப்பாக்கி சூடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து சோனல் மிஸ்ரா கோவை டிஐஜியிம் அறிக்கை கொடுத்தார். அதன் பேரில் துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைத்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் லோகநாதனை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+