இரு லாரிகள் மோதலில் ஒருவர் பலி-செங்கல்பட்டு-சென்னை போக்குவரத்து கடும் பாதிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தால் செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திண்டிவனத்திலிருந்து சவுக்குக் கட்டைகளை ஏற்றி வந்த லாரி ரிப்பேராகி செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வழியாக திருச்சியிலிருந்து மைதா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி கிளீனர் முத்துகிருஷ்ணன்(22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் கோபால் கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்தால் நெடுஞ்சாலை முழுவதும் அடைபட்டுவிட்டது.
இதனால் சென்னையிலிருந்து வந்த வாகனங்களும், சென்னை சென்ற வாகனங்களும் செங்கல்பட்டு நகருக்குள் திருப்பி விடப்பட்டன. இதனால் நகருக்குள் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்தன.
5 மணி நேரத்திற்கு மேலாக செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த விபத்துக்கு காரணமான பழுதாகி நின்ற லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications