குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் மோடி- கருத்துக் கணிப்பு
டெல்லி: குரஜாத்தில் மீண்டும் நரேந்திர மோடி தலைமயில் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சிஎன்என் ஐபின் தொலைக்காட்சியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் திவ்ய பாஸ்கர் நாளிதழ்களும் இணைந்து நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் மொத்தமுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளி் பாஜக 100 இடங்களில் வெல்லும் எனத் தெரியவந்துள்ளது.
இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. 2002ம் ஆண்டு கிடைத்த வாக்குகளை விட பாஜகவுக்கு 5 சதவீத வாக்குகள் குறைவாகவே கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இருப்பினும் 45 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் பாஜகவே முன்னணியில் உள்ளது. காங்கிரசுக்கு பாஜகவை விட 5 சதவீத வாக்குகள் குறைவாகவே கிடைக்கும் என்பதால் 100 இடங்களை பாஜக பிடித்துவிடும் எனத் தெரிகிறது.
காங்கிரசுக்கு 76 இடங்கள் கிடைக்கலாம். தேர்தலுக்கு முன் பாஜகவின் ஆதரவில் 4 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டால் இரு கட்சிகளும் தலா 88 இடங்களைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாட்டி 63 சதவீதத்தினர் திருப்தி அடைந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இது 2002ம் ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும்.
முஸ்லீம்களில் 18 சதவீதம் பேர் குஜராத்தில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதாகவும், 31 சதவீதத்தினர் சட்டம் ஒழுங்கு மேலும் சீர்குலைந்துள்ளதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications