ராணுவத் தாக்குதலில் 19 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் வடக்கில் நடந்த கடும் சண்டையில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
முகமலைப் பகுதியில் பாதுகாப்பு அரண் நிலைகளைத் தாண்டி வர முயன்ற விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் நான்கு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
இதேபோல வவுனியாவில் நடந்த இரு சண்டைகளில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். நரிக்குளத்தில் 9 பேரும், விளாத்திகுளத்தில் 5 பேரும் பலியானார்கள். கள்ளிக்குளம் பகுதியில் ஒருவர் பலியானார் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications