நில மோசடி-பீட்டர் அல்போன்ஸ் நண்பர் கைது
திருநெல்வேலி: தென்காசி அருகே போலி பத்திரம் தயார் செய்து நில மோசடி செய்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸின் நண்பரான பேரூராட்சி துணைத் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் சேவியர். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு இதே கிராமத்தில் 246 ஏக்கர் பரப்பளவிலான குடும்பச் சொத்து உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும்.
இந்த நிலத்தை இதேப் பகுதியை சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் துரை ராஜா என்ற அந்தோணி சவரிமுத்து, மைக்கேல் சேவியரின் தந்தை பெயரை தனது தந்தை பெயராக குறிப்பிட்டு போலி பத்திரம் மூலம் தனது உறவினரான ஆயக்குடி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணி வியாகப்பனுக்கு விற்றுவிட்டார்.
இந்த மோசடிக்கு அந்தோணி வியாகப்பனின் மகன் கார்வின் மற்றும் நாராயணன், டெய்லர் ஜான் கென்னடி, ஆனந்த் ஆகியோர் உடந்தையாகவும் இருந்துள்ளனர். இந்த மோசடி குறித்து மைக்கேல் சேவியருக்கு தெரியவந்தது.
உடனே அவர் காவல் துறையினரிடம் புகார் செய்தும் பலனின்றி போனதால் நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பனிடம் புகார் செய்தார். அவர் உடனடியாக மாவட்ட எஸ்.பி ஸ்ரீதர் மூலம் குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி வழக்கு பதிவு செய்து துரைச்சாமி என்ற அந்தோணி வியாகப்பனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்தோணி வியாகப்பன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சுக்கு மிகவும் நெருங்கிய நண்பராம்.
இவர் மூலம் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், அதன் பின்னர் பனைவாரியக் குழு பதவியும் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications