தேவகோட்டை-7 வழிப்பறி கொள்ளையர்களுக்கு கடுங்காவல்!
தேவகோட்டை: தேவகோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளையடித்து வந்த 7 பேருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூரில் எலக்ட்ரீகல் கடை வைத்து இருப்பவர் ரத்தினசாமி. இவர் கடந்த 2005ம் ஆண்டு தனது மனைவி கல்யாணியுடன் கொல்லங்குடிக்குச் சென்று கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கல்லல் என்ற இடத்தில் காரில் வந்த 7 போர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து மானாமதுரையை சேர்ந்த சுந்தரம், முத்துராமன், ரவி, பாக்கியராஜ், நிர்மல், முத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேவகோட்டை உதவி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி வெங்கடாஜலம் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் 7 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டதுடன், கொள்ளையடிக்க அவர்கள் பயன்படுத்திய காரை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications