சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம்-தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
ஹைதாராபாத்: விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்கக் கோரி ஆந்திர சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.எல்.ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 அறிவிக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 32 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இன்று காலை சட்டசபை கூடியதும், மீண்டும் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குறித்த அதே பிரச்சனையை எதிர்கட்சியினர் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. கவுன்சில் தலைவர் ஏ.சக்ரபாணி இது குறித்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் சட்டசபை தலைவர் இருக்கையின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் சக்ரபாணி, சட்டமன்ற விவகாரத் துறை அமைச்சர் ரோசையாவிடம் சபை அமைதியாக நடக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.
இதனை தொடர்ந்து ரோசையா சட்டசபை இருக்கை முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களையும், 2 தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி எம்.எல்.ஏக்களையும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து 14 எம்.எல்.ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மற்ற எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வர்த்தகத்தில் நுழைவதால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications