சங்கரன்கோவில் அருகே பெண் வெட்டிக் கொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே நடந்த நிலத்தகராறில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில், குருவிகுளம் அருகேயுள்ள அழகுநேரி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரின் மனைவி காந்திமதி தனக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரை சேர்ந்த செல்லையா மகன் அப்பாத்துரை என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.
இந்நிலையில் காந்திமதியிடம் உள்ள மேலும் ஒரு பகுதி நிலத்தை தனக்கு குத்தகைக்கு தருமாறு அப்பாத்துரை கேட்டு வந்தார். ஆனால் காந்திமதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் அப்பாத்துரை தனது உறவினர்கள் சண்முகையா, அண்ணாத்துரை, வீரபாண்டி ஆகியோருடன் காந்திமதி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரிடம் மீதி நிலத்தையும் குத்தகைக்கு தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால் இதற்கு காந்திமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த அப்பாத்துரை தனது உறவினர்களுடன் சேர்ந்து காந்திமதியை அரிவாளால் சரிமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்திலேயே துடிதுடிக்க இறந்துவிட்டார்.
காந்திமதியை வெட்டி கொலை செய்த 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சவுந்திரராஜன், சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
குருவிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அப்பாத்துரை உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications