கருணாநிதி மீதான வழக்கு: விவரம் கேட்கும் டெல்லி உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil


டெல்லி: ராமர் குறித்த அவதூறாக பேசியதற்காக முதல்வர் கருணாநிதி மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக விவரங்களை டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டம் தொடர்பான பிரச்சனையில் ராமர் குறித்து அவதூறாக பேசிய முதல்வர் கருணாநிதி, ராமர் பாலத்தை கட்டிய ராமர் என்ன என்ஜீனியரா என்று பேசியிருந்தார்.

இவரின் இந்த பேச்சிற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மோனிகா அரோரா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.

அக்டோபர் 17ம் தேதி வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. வழக்கு தொடர கவர்னரின் முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

ஆனால் வழக்கறிஞர் அரோரா, இந்த வழக்கில் கவர்னரின் அனுமதி தேவையில்லை. இது தனிப்பட்ட வழக்கு. மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு என்று வாதாடினார்.

மேலும் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை தொடர்பாக ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+