மும்பையில் நவ. 25ல் இஸ்லாமிய மாணவர் மாநாடு
டெல்லி: இந்திய இஸ்லாமிய மாணவர் கழகம் சார்பில் நவம்பர் 25ம் தேதி தேசிய அளவிலான மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்திய இஸ்லாமிய மாணவர் கழகத்தின் இந்த தேசிய மாநாடு மும்பையில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி, கேரளா, மேற்கு வங்கம், டெல்லியிலிருந்து மூன்று தேசிய பிரசாரமும் தொடங்கியுள்ளது.
இந்திய இஸ்லாமிய மாணவர் கழகத்தின் 25வது ஆண்டு விழாவையொட்டி இந்த தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வியை சீரமைப்பது, சமூகத்தை புதுப்பிப்பது என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
தேசிய அளவில் மூன்று மாநிலங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அந்த மூன்று மாநிலங்களிலும் பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வரங்கங்கள், சைக்கிள் பேரணிகள், மாணவர் சந்திப்புகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்டவை நடைபெறும்.
இதுதவிர தெரு முனை நாடகங்கள், டாக்குமென்டரி படங்கள் திரையீடு உள்ளிட்டவையும் இதில் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications